வைட் சாக்லேட் செய்வது எப்படி தெரியுமா…?

சாக்லேட் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட் தான். சுவையான வைட் சாக்லேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் – அரை கப்
  • ஐசிங் சுகர் – அரை கப்
  • பால் பவுடர் – அரை கப்
  • வெண்ணிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பவுலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் ஐசிங் சுகர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் பால் பவுடர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் அதனுடன் அரை டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்பொது இந்த கலவை கெட்டியாக மாறி விடும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து, அந்த பாத்திரத்தின் மேல் இந்த பவுலை வைத்து கலவை சிறிது திரவமாக மாறும் வரை வைத்து கலக்க வேண்டும். பின் அதனை இறக்கி, அந்த கலவையை மோல்டில் ஊற்றி, அதனை சிறிது நேரம் ப்ரீசரில் வைத்து பின் எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான வைட் சாக்லேட் தயார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment