சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

நாம் நமது அன்றாட பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகள் நமது

By leena | Published: Jul 25, 2019 01:44 PM

நாம் நமது அன்றாட பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • மிளகு - 2 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
  • தனியா - 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 3
  • புளிக்கரைசல் - 1 எலுமிச்சை அளவு
  • கடுகு - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
  • நல்லெண்ணெய் - சிறிதளவு
  • பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை

கடலை பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு, தனியா அனைத்தையும் ஒரு கடாயில் எண்ணெய் விடாமல், பச்சை வாசம் போகும் வரை வறுக்க வேண்டும். பிறகு அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு, பெருங்காய பொடியுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் கடாயை வைத்து, கடுகு போட்டு பொரிந்தவுடன், கறிவேப்பிலையை போட வேண்டம். பின் புளிக்கரைசலை ஊற்றி, பச்சை வாசம் போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்பொது அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்க வேண்டும். பின் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்பொது சுவையான மிளகு குழம்பு தயார்.
Step2: Place in ads Display sections

unicc