சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி தெரியுமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. மீன்களில் பல வகையான மீன்கள் உண்டு. மீன்களை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.

தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • மீன் -கால் கிலோ
  • மிளகு – 4 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • சோம்பு – 2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் -தேவைக்கேற்ப
  • சோளமாவு – 2 ஸ்பூன்

செய்முறை

மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி  வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிளகு, சீரகம், சோம்பை வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் கடாயில் நறுக்கிய மீனை போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சிபூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, சோளமாவு போட்டு நன்றாக பிசைய வேண்டும். அதனை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீனை ஒவ்வொன்றாய் போட்டு, சிறு தீயில் வேக வைத்து, கருகாமல் ஒவ்வொன்றாய் நகர்த்தி விட வேண்டும். மீனின் ஒரு பக்கம் நன்றாக வெந்ததும், மீனை மெதுவாக உடையாமல் புரட்டி போட வேண்டும். மீன் நன்கு வெந்ததும் எடுத்து விட வேண்டும். இப்பொது சுவையான மீன் வறுவல் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.