சுவையான தேங்காய் அல்வா செய்வது எப்படி தெரியுமா?

தேங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டிருப்போம் ஆனால், அதில் அல்வா செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். எப்படி செய்வது தெரியுமா? 

தேவையான பொருள்கள் 

  • தேங்காய் 
  • சர்க்கரை 
  • பால் 
  • ஏலக்காய் 
  • முந்திரி 
  • நெய் 

செய்முறை 

முதலில் தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஷியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். 

கொதித்ததும், அதனுடன் அரைத்த விழுதை விட்டு கிளறவும், வாசனைக்காக ஏலக்காயை போடி செய்து தூவவும். அல்வா பதத்திற்கு  வந்ததும், ஒரு தட்டையான பாத்திரத்தில் நெய் தடவி பரப்பவும். காய்ந்ததும் வெட்டி சாப்பிட்டால் அருமையான அல்வா தயார். 

author avatar
Rebekal