வாய்ப்புண் இருந்தால் இதை செய்யுங்கள் குணமாகி விடும்.!

  • வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன.
  • வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இந்த வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன.

இந்த வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் உணவுப்படும் போது எரிச்சல் வலியும் ஏற்படும் எனவே இந்த வாய்ப்புண்ணை இயற்கை முறையில் சரி செய்வது பற்றி பார்க்கலாம்.

வழிமுறைகள்:

கொய்யா இலையை பறித்து அதை மென்று அதிலுள்ள சாறை சாப்பிட்டு வந்தால் தினசரி மூன்று முறை இதைச் செய்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிடலாம்.அப்படி சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

தக்காளியை கூழாக்கி அதை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது தக்காளியை மென்றும் சாப்பிடலாம் இவ்வாறு செய்தல் வாய்ப்புண் நீங்கும்.

எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் அவ்வாறு செய்தால் வாய்ப்புண் குறையும்.

வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும் அவ்வாறு செய்தல் வாய்ப்புண் சரியாகும்.

author avatar
murugan