தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் உடல்நல குறைவு..!மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்றார் அவர்.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் .வழக்கமான பரிசோதனைக்காகத்தான் அவர் சென்றிருப்பதாக கூறப்பட்டது.அதன் பின்னர் வீடு திரும்பினார் விஜயகாந்த்.
 
இந்நிலையில் தற்போது  தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment