2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம் – WHO

2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம், 2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி  கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீவிர பரிசோதனை, முறையான மருத்துவம், வீரியமிக்க தடுப்பு மருந்து அவசியம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், ஏழை மக்களுக்கும் சிகிச்சை அளிப்பதை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.