உ.பியில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழப்பு!

இன்று அதிகாலையில் உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்றபோது மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலங்களில் தங்கி வேலைபார்க்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். 

ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து சேவைகள் இன்னும் தொடங்காத நிலையில், இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடைபயணமாகவோ அல்லது லாரிகளிலோ தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இவர்களது இந்த பயணத்தால் அவர்களுக்கு பல ஆபத்துகளும் ஏற்படுவதுண்டு. 

இந்நிலையில், ராஜஸ்தானில் தங்கி வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த போது, இன்று அதிகாலையில் உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்றபோது மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  22 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தொழிலாளர்களில் பலர், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.