ராணுவ பயிற்சிக்குப் புறப்பட உள்ள தோனி!

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசீல்  சுற்று பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வு தேர்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டம் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம்  முக்கியமாக தோனி சார்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தோனி இந்த தொடரில் இருந்து விலகி பாராமிலிட்டரி பிரிவுடன் இரண்டு மாதங்கள் பணியாற்ற விரும்புகிறார் என பிடிஐ நிறுவனத்திற்கு ஐசிசி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.