காவடியுடன் படை வீட்டிற்கு படையெடுக்கும் பக்தர்கள்..! அரோகரா கோஷத்தில் அதிரும் படை வீடு ..!

தமிழ்  கடவுளான  முருகனின் அறுபடை வீடுகளில் 3 ம் படை வீடான பழனியில்  தைப்பூச விழா மிக பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து மலைமேல் விற்றிருக்கும் முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுபவது வழக்கம்.

Image result for பழனி முருகன் பாதயாத்திரை

அவ்வாறு இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழாவானது  கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு  தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை அடுத்து                  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு படையெடுத்த வந்த வண்ணம் உள்ளனர்.

Related image

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை இரவு 7.45 மணிக்கு மேல் சரியாக 8.45 மணிக்குள் நடக்கிறது.இதனைத் தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் இரவு 9.30 மணிக்கு வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியானது நடைபெறும்.

Image result for பழனி முருகன் பாதயாத்திரை

திரு விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக  தைப்பூசத் தேரோட்டமானது (21-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேர் 4 ரத வீதிகளில் உலா வருக்கிறது. மீண்டும் தேர் நிலையை அடையும்.

author avatar
kavitha

Leave a Comment