குட்டி தூக்கம் ரெம்ப நல்லது! ஆயுள் நீடிக்க வேண்டுமா அப்பப்போ தூங்குங்க!

சிலருக்கு இரவில் நன்றாக தூங்குவது மட்டுமல்லாமல், பகலிலும் லேசாக தூங்கி வழிவார்கள், சிலரோ கிடைக்கும் கேப்களில் குட்டி குட்டி தூக்கம் போட்டு விடுவார்கள். இவர்களை பார்க்கையில் பலர் இவர்களை சோம்பேறிகள், இரவில் ஒழுங்காக தூங்கவில்லையா என கிண்டலடிப்பதுண்டு.

ஆனால் இந்த குட்டி தூக்கம் ரெம்ப நல்லது என ஸ்விசர்லாந்து லோசான் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி நடத்திய மருத்துவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில், குட்டி தூக்கம் போடுவதால், இதயத்திற்கு நல்லது எனவும், மன அழுத்தம் குறையும், எனவும் இதன் மூலம் ஆயுள் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வாத நோய் வராமல் 50 சதவீதம் தடுக்கப்படுகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.