#D40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாகுகிறது. 

நடிகர்  தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்கி வருகிறார்.இந்த படம் தனுஷுக்கு  40-வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு இன்னும்பெயர் வைக்கவில்லை.இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன்  உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ்( Y Not Studios ) தயாரித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்புகள்  விறுவிறுப்பாக  நடைபெற்று  முடிந்துள்ளது.எனவே படத்தின் ஃபஸ்ட்லுக் பிப்ரவரி  9-ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இன்று  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதனால் நடிகர் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.