"விரைவில் முடியும் ஊரடங்கு, மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு" - மதுரையில் தளபதி ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.!

"விரைவில் முடியும் ஊரடங்கு, மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு" - மதுரையில் தளபதி ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.!

விரைவில் முடியும் ஊரடங்கு, மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு என்ற வசனங்களுடன் கூடிய போஸ்ட்ரை மதுரையில் தளபதி ரசிகர்கள் ஒட்டி மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. இதனை கண்டித்து தளபதி ரசிகர்கள் மதுரையில் போஸ்ட்ர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

தளபதி விஜய்யின் ரசிகர்கள் எப்போதும் வித்தியாசமான முறையில் போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு மதுரை ரசிகர்களின் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்ட்ரில் மக்கள் இயக்கத்தின் புரட்சித் தலைவரே மற்றும் புரட்சி தலைவியே என்று கூறி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம். ஜி. ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஓடிடியில் விஜய்யின் மாஸ்டர் படத்தினை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து "விரைவில் முடியும் ஊரடங்கு, மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு" என்ற வசனங்களுடன் கூடிய போஸ்ட்ரை மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். தற்போது இந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Latest Posts

அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட சுப்பையா சண்முகத்தை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம் - மு.க.ஸ்டாலின்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
விடிய விடிய பெய்த கனமழையால் கடல் போல கட்சி தரும் சென்னை அண்ணா சாலை!
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..... வானிலை ஆய்வு மையம்..!
முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.75 க்கு விற்பனை...!
#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!