2 சர்வதேச விமான நிலையங்களை இயக்கி வரும்… அகஸ்டின் தெ ரோமனெட்க்கு கொரோனா வைரஸ் …

சீனாவின் உகானில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் சீனாவை மட்டுமல்லாமல் உலகம் நாடுகளை மிரட்டி வருகிறது. சீனாவை அடுத்து தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகமாக உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். ஆனாலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

உலகமுழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இந்நிலையில் பிரான்சில் கொரோனா வைரசால் 19 பேர் பலியாகி உள்ளனர். 1,100-க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்னர்.

இதையெடுத்து பாரீசில் உள்ள 2 சர்வதேச விமான நிலையங்களை இயக்கி வரும் குரூப்பே ஏ.டி.பி. நிறுவனத்தின் தலைவர் அகஸ்டின் தெ ரோமனெட்டுக்கும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மிக மோசமாக இல்லை என்பதால் வழக்கமாக செய்யும் வேலைகளை செய்து வருவதாகவும், தனது வீட்டில் அடுத்த 2 வாரங்களுக்கு அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan