கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 361 ஆக உயர்ந்தது.! 16000 க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு.!

  • சீனாவில் கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளதால் பலியானவர்களின் அதிகரித்து கொண்டே செல்கிறது.
  • சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா:

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.

இன்றைய பலி எண்ணிக்கை:

இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.நேற்று மட்டும் 56 பேர் இறந்து உள்ளனர்.

நேற்றைய பாதிப்பு:

நேற்று மட்டும் சீனாவில் 2100- க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மத்திய சீன மாகாணத்தில் மொத்த  16000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று பிலிப்பைன்ஸில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தார்.சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் இறந்த முதல் மரணம் இதுவாகும்.

சீனாவில் இருந்து வெளியேற்றம் :

இந்தியா உட்பட பல நாடுகளை சார்ந்த நூற்றுக்கணக்கானோர்  கொரோனா வைரஸ்  அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள ஹூபே மற்றும் வுஹானில் மாகாணங்களில் இருந்து வெளியேற்றியுள்ளன.

நேற்று காலை 9.45 மணிக்கு இரண்டாவது சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள்  டெல்லி வந்தனர். இவர்களில் 7 பேர் மாலத்தீவை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் பரிசோதனைக்கு நடத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

 

author avatar
Dinasuvadu desk