அமெரிக்காவில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் கொரோனா வைரஸ்!

நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,212 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸின் தொடர் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் நாளுக்குநாள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற்னர். 

இந்த வைரஸ் தாக்கத்தால், உலக அளவில் இதுவரை, 6,031,023 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 366,812 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்காதால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில்,அமெரிக்காவில் இதுவரை, 1,793,530 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 104,542 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,212 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.