டெல்லி எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசிக்கான மிகப்பெரிய மனித சோதனை.!

இந்தியாவிலேயே அதிக அளவில் மனித சோதனைக்கு உட்படுத்தப்படும் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட மனித சோதனை டெல்லியில் திங்களன்று தொடங்கவுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனிடையே தான்  ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவான ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்து சோதனைப்படுத்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கழகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் திங்களன்று இந்திய ஏஜென்சிகள் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்தவ மையத்தில் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை நடத்தப்பட உள்ளது.

குறைந்தது 100 தன்னார்வலர்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தகவல் வெளியாகின. பாரத் பயோடெக் சார்பில் வெளியான தகவலின்படி, 370 தன்னார்வலர்கள் இந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனைக்கு தயாராகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவில் மனித சோதனைக்கு உட்படுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட மனித சோதனை டெல்லியில் திங்களன்று தொடங்கவுள்ளது. மொத்தம் 3 கட்டங்களாக இந்த சோதனை நடைபெற உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.