கொரோனா எதிரொலி -ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. அறிவிப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.மேலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

பின் கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன்  கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை, தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளுக்காக, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS) ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.