கொரோனா எதிரொலி : சுற்றுலா தளமான ஈபிள் டவரை பார்வையிட அதிரடி தடை.!

உலக நாடுகளில் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலகளவில் 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகி, 1,00,000க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய தொற்று நோய் கொரோனா என்று அறிவித்தது. இதன் விளைவு காரணமாக உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களில் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்த நிலையில் பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலா தளமான இருக்கும் ஈபிள் டவரை பார்வையிட முற்றிலும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் கொரோனவால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,000க்கும் மேலானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக ஓரிடத்தில் அதிகமாக மக்கள் கூடுவது தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே அங்கு தடை விதித்துள்ளது. இதேபோல் பாரிஸில் உள்ள மியூசியம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்