தமிழகத்தில் 4,905 ஆண்களுக்கும், 2,295 பெண்களுக்கும் கொரோனா.!

தமிழகத்தில் இன்று 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 412 ஆண்களும், 257 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மேலும் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று 135 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 7,204 பேரில் 1,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

இன்று கொரோனா கண்டறியப்பட்ட 669 பேரில் ஆண்கள் 412 பேரும், பெண்கள் 257 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 7,204 பேரில் 4,905 பேர் ஆண்களும், 2,295 பேர் பெண்களும் கொரோனா வைரசுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இதுவரை மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மொத்தம் 53 உள்ளது. இதில், அரசு மருத்துவமனையில் 37 ஆய்வகங்களும், தனியார் மருத்துவமனையில் 16 ஆய்வகங்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்