சர்ச்சைகளுக்குள்ளான கோமாளி படத்தின் முக்கிய காட்சி நீக்கம்!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை

By Fahad | Published: Apr 06 2020 10:13 PM

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநான் இயக்கி உள்ளார். காஜல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் படத்தில் ரசிகர்களை கவரும் படி பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ட்ரெய்லரின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து 16 ஆண்டுகள் கழித்து, எழுந்திருக்கையில் ரஜினி அரசியல் வருகையை [பற்றி அறிவிப்பர். உடனே ஜெயம் ரவி, யாரை ஏமாற்ற பாக்குறீங்க இது 1996 என கூறி கலாய்த்து இருப்பார். இந்த காட்சி சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.  கமல்ஹாசன் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாக பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்தார்.