டெஸ்லா காருடன் கலக்கும் முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று  நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் .

தற்பொழுது அவர் இங்கிலாந்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமேரிக்காவில் உள்ளார்.அவர் நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தை பார்வையிட்டார்.டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் கார் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி விளக்கினர் .

முதலமைச்சர் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க அழைப்பு விடுத்தார்.அதற்க்கான முழு ஒத்துழைப்பை தமிழக அரசு ஏற்படுத்தி தரும் என்று டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளிடம் அவர் கூறினார் .

முதலமைச்சருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரி உடன் சென்றனர்.

 

author avatar
Dinasuvadu desk