சீன அதிபரின் இரண்டு நாள் பயணத் திட்டம்…!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.
இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் மேற்கொள்ளும் இரண்டு நாள் பயணத்தின் அட்டவணை இதோ..
வெள்ளிக்கிழமை பயணத் திட்டம் :
12.30am – நரேந்திர மோடி சென்னைக்கு வருகிறார்.
1.30pm – சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வருகிறார்.
1.45pm- விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பாடு.
2.05pm – நட்சத்திர ஹோட்டல் அடைதல்.
4.05pm – நட்சத்திர ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் செல்கிறாா்.
4.55pm – சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்கிறாா்.
இரவு 8 – கலைநிகழ்ச்சிகள் பங்கேற்பு, இருதரப்பு பேச்சுவார்த்தை முடிதல்.
இரவு 8.05 – மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டு நட்சத்திர ஹோட்டல் செல்தல்.
இரவு 9 – நட்சத்திர ஹோட்டல் அடைந்து ஓய்வு எடுத்தல்.

சனிக்கிழமை பயணத் திட்டம் :
9am – நரேந்திர மோடி தங்கியுள்ள தாஜ் ஹோட்டலுக்கு சீன அதிபர் வருகை.
10am – 11.45pm வரை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
1.25pm – சீன அதிபர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.
1.30pm – சென்னையில் இருந்து சீன அதிபர் நேபாளத்துக்குச் செல்ல உள்ளாா்

author avatar
Vidhusan