அந்த விதியை பயன்படுத்தினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்கும்.! ட்ரம்ப் எச்சரிக்கை.!

கடந்த இரு ஆண்டுகளாக வர்த்தக போரில் ஈடுபட்டு வந்த நாடுகள் தான் அமெரிக்காவும், சீனாவும்.! இரு நாடுகளுமே எதெரெதிர் நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

இதனை அடுத்து இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான கசப்புணர்வுகளை மறந்து கடந்த ஜனவரி மாதம் ஒரு வர்த்தகத்தின் முதல்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதனடிப்படையில்,  அமெரிக்காவிடம் இருந்து 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா வாங்க வேண்டும்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்களோ, இயற்கை சீற்றங்களோ நடக்கும்போது, அதற்கேற்ப மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஒப்பந்தத்தில் ஒரு விதிமுறை உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல, இயற்கை சீற்றங்கள் போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும்போது, அதனை காரணம் கூறி மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிற ஒரு விதிமுறை உள்ளது. தற்போது, இந்த விதிமுறையை சீனா பயன்படுத்தக்கூடும் என் அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்த பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளித்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா அந்த குறிப்பிட்ட விதியை பயன்படுத்தினால், அந்நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன். அப்போது, சீனாவிடம் என்னை விட கடுமையாக நடந்து கொள்பவரை நீங்கள் வேறெங்கும் பார்க்க முடியாது. அந்தளவிற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பேன்.’ என்பது போல கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.