சீனா 38,000 சதுர கி.மீ. பகுதியையும் ,பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது - ராஜ்நாத் சிங்

சீனா 38,000 சதுர கி.மீ. பகுதியையும் ,பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது - ராஜ்நாத் சிங்

சீனா 38,000 சதுர கி.மீ. பகுதியையும் ,பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது என்று  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  மாநிலங்களவையில்  பேசினார்.அவர் பேசுகையில், இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.லடாக் பகுதியில்  38,000 சதுர கி.மீ.  நிலத்தை சீனா கையகப்படுத்தி உள்ளது. அருணாசலப்பிரதேசத்தில் உள்ள எல்லையில் 90,000 சதுர கி.மீ. பரப்புக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

எல்லை பகுதியில் பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமித்துள்ளது.இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம்.எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.  எல்லையில் சீனப்படைகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டுடன் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்... சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்... விசாரனை முடிவில் வெளிவர்ம்...
"அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!"- ஏஐசிடிஇ
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு - தமிழக முதல்வர் இரங்கல்.!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு... மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.....
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 8,830 பேருக்கு கொரோனா.!
ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் - மு.க. ஸ்டாலின்
#IPL2020 : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு
#BREAKING: அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி..!
டெல்லியில் இன்று 3,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!