சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்.!

  • திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை

By Fahad | Published: Apr 02 2020 11:25 AM

  • திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திறந்து வைக்கிறார். 
திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திறந்து வைக்கிறார். அதாவது பத்திரிகை, கல்வி, இலக்கியம் போன்றவைகளில் சிறந்த சேவை ஆற்றிய மறைந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த மணிமண்டபத்தில் சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கலச்சிலை மற்றும் நூலகம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மணிமண்டபத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிவந்தி ஆதித்தனாரின் சிலையையும் திறந்து வைக்கிறார். மேலும் இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, பாண்டியராஜன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர் என குறிப்பிடப்படுகிறது.

More News From Sivanthi Adityan