கடலூர் : இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி மீது சக மாணவன் ஆசீட் வீச்சு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலை கழக கல்லூரியில்

By manikandan | Published: Sep 10, 2019 10:23 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலை கழக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தான் சுசித்ரா. இந்த மாணவி மீது சக மாணவன் முத்தமிழ், ஆசீட் வீசி உள்ளான். இதனை கண்ட கல்லூரி மாணவர்கள் முத்தமிழை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்தமிழ் மற்றும் அசீட் வீச்சிற்கு உள்ளான சுசித்ரா ஆகிய இருவரும் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc