இந்த செய்தியை படித்தால், நெருங்கிய உறவினர்களை கூட நீங்கள் சந்தேகப்பட வாய்ப்புள்ளது!

சென்னையில் ஒரு பொறியியல் பட்டதாரி, தனக்கு வேலை பறிபோனதால் தனது மனைவியுடன் சேர்ந்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று திருடிய சம்பவம் அப்பகுதியை அதிரவைத்துள்ளது. மேலும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்களை கூட நம்பமுடியாத சூழலை இந்த செய்தி சிலருக்கு ஏற்படுத்திவிடும் அபாயமும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஜெகதீசன் என்பவர் காவல்நிலையத்தில், தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டு நடைபெற்றுள்ளதாக புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக ஜெகதீசனிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், தன் வீட்டிற்கு தெரியாதவர்கள் யாரும் வரவில்லை. ஜெகதீசன் மனைவி சொந்தக்காரரான கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் வந்ததாக தெரிவித்தார். உடனே அவர்களிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பொறியியல் பட்டதாரியான கார்த்திகேயன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர், அவருக்கு வேலை பறிபோகவே என்ன செய்வதென்று தெரியாமல் மனைவியுடன் சேர்ந்து உறவினர்கள் வீட்டில் திருட முடிவு செய்தார். அதன் படி முதலில் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு விருந்தினர் போல சென்று, பின்னர் அந்த வீட்டை நோட்டமிட்டு பின்னர் சாவியை கண்காணித்து போலி சாவி செய்து பின்னர்  இன்னோர் நாள் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கள்ள சாவி மூலம் பொருட்களை திருடி வந்துள்ளனர்.
கார்த்திகேயன் மனைவி நித்யாவின் தோழி வீட்டில் 12 பவுண் நகையை கள்ளச்சாவி மூலம் இந்த திருட்டு ஜோடி திருடியுள்ளது. அதே போல, கள்ளச்சாவி மூலம் உறவினர் ஜெகதீசன் வீட்டிலும் கள்ள சாவி மூலம் பொருட்களை திருடியுள்ளனர்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என யார் வந்தாலும் விருந்தோம்பல் செய்யும் தமிழ்நாட்டில் இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலர் இந்த சம்பவத்தை தொடர்ந்து, வீட்டிற்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் மீதும் சந்தேகப்படும் சூழல் உண்டாகும் அபாயம் உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.