சந்திராயன் 2 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது

இன்று  சந்திராயன் 2 விண்கலம்  விண்ணில் ஏவப்படுகிறது.

சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில்  ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் அன்று  ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதன் பின்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இன்று (ஜூலை 22  ஆம் தேதி) பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று  தெரிவித்தது.இதனால் இன்று  சந்திராயன் 2 விண்கலம்   விண்ணில் ஏவப்படுகிறது.