அனுதாப செய்திகளை ஆழமாக பாராட்டுங்கள்.! – மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ட்வீட்.!

துயரமான கோழிக்கோடு விமான விபத்து மீதான அனுதாப செய்திகளை ஆழமாக பாராட்டுங்கள். இந்த கடினமான நேரத்தில் இத்தகைய அனுதாப ஆதரவுகள் மன பலத்தை அதிகரிக்க உதவும். – மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பள்ளதாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த சோக நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் சினிமா பிரபலங்கள் என பலர் தங்கள் வருத்தங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த  கோர விபத்திற்கு இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானை சேர்ந்த தூதர்களும் இந்த விபத்து குறித்து தங்கள் வருத்தத்தை பதிவு செய்து,  பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்பதாக தெரிவித்தனர்.

வெளிநாட்டு தலைவர்கள், தூதர்களில் அனுதாப செய்திகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது டிவிட்டர் பக்கத்தில் , ‘ துயரமான கோழிக்கோடு விமான விபத்து மீதான அனுதாப செய்திகளை ஆழமாக பாராட்டுங்கள். இந்த கடினமான நேரத்தில் இத்தகைய அனுதாப ஆதரவுகள் மன பலத்தை அதிகரிக்க உதவும்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.