சுயநலம் கூடாது! ஒன்றிணைந்து போராட வேண்டும் – WHO தலைவர்

கொரோனாவிலிருந்து தங்கள் நாடு தப்பித்தால் போதும் என்ற சுயநலத்துடன் அனைத்து நாடுகளும் இருக்க கூடாது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிஅக்ரிது வருகிற நிலையில், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனாவிலிருந்து தங்கள் நாடு தப்பித்தால் போதும் என்ற சுயநலத்துடன் அனைத்து நாடுகளும் இருக்க கூடாது என எச்சரித்துள்ள நிலையில், உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும், தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தை காட்டுவது பயன் தராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.