793 படங்களுக்கு தடை விதித்த மத்திய திரைப்பட தணிக்கை குழு….!!!

  • திரையுலகில் நாளுக்குநாள் பல திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
  • மத்திய திரைப்பட தணிக்கை குழு, கடந்த 2000 முதல் 2016-ம் ஆண்டு வரையில் 793 திரைப்படங்களை தடை செய்துள்ளது.
  • தடை செய்யப்பட்ட படங்கள் பெருமான்மையான படங்கள் பாலியல் குற்றம் சார்ந்த படங்கள் ஆகும்.

திரையுலகில் நாளுக்குநாள் பல திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களும், திரைப்பட தணிக்கை குழு சரிபார்த்து, அனுமதி வழங்கப்பட்ட பின்பு தான் திரையிடப்படும்.

இந்நிலையில்,மத்திய திரைப்பட தணிக்கை குழு, கடந்த 2000 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் 793 திரைப்படங்களை தடை செய்துள்ளதாக தகவல் உரிமை சட்ட தகவல் மூலம் வெளியாகியுள்ளது.

231 இந்திப்படங்களும், 96 தமிழ் படங்களும், 56 தெலுங்கு படங்களும், 36 கன்னட படங்களும், 23 மலையாள படங்களும், 17 பஞ்சாபி படங்களும் இதுவரை தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட படங்கள் பெருமான்மையான படங்கள் பாலியல் குற்றம் சார்ந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment