முக்கிய அறிவிப்பு .! இனி இந்த 12 மணி நேரத்தில் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க செல்போன் அவசியம். !

  • இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல் நம்பர் அவசியம்.
  • அந்த நம்பருக்கு வரும் ஓடிபி வைத்து மட்டுமே இனி ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க முடியும்.

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியாக  எஸ்.பி.ஐ. உள்ளது. இந்நிலையில் எஸ்.பி.ஐ. பேங்க் ஏ.டி.எம்.களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்து உள்ளது.

அதாவது எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வேண்டும் என்றால் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போனை கையில் வைத்து இருக்க வேண்டும்.

அந்த நம்பருக்கு வரும் ஓடிபி வைத்து மட்டும் ரூ.10,000-க்கு மேல்  மேல் பணம் எடுக்க முடியும். இனி எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை எஸ்.பி.ஐ. பேங்க் ஏ.டி.எம்.களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது  வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அந்த ஓடிபி நம்பரை வைத்து மட்டுமே பணம் எடுக்க முடியும்.

இந்த திட்டம்  எஸ்.பி.ஐ ஏ.டி.எம்.களில் மட்டுமே செயல்படும்.மாற்ற வங்கி ஏ.டி.எம்.களில் இது பொருந்தாது.இந்த திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.இதற்கு முன் வாடிக்கையாளர்களுக்காக ஏ.டி.எம். கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் யோனோ கேஷ்  முறையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan