உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் முதல் இரட்டை சதம் கேப்டன் கோலி ..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே நேற்று முதல்  டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில்

By murugan | Published: Oct 11, 2019 02:46 PM

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே நேற்று முதல்  டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி சதம் அடித்து இருந்த நிலையில் தற்போது 297பந்தில் 200 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடித்து உள்ளார்.இதில் 28 பவுண்டரி அடங்கும். மேலும் டெஸ்ட் போட்டியில் கோலியின் 7-வது இரட்டை சதம் ஆகும். இந்திய அணியில் அதிக முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டி  உலக சாம்பியன் ஷிப் டெஸ்ட் போட்டி என்பதால் இதில் இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை  கோலி பெற்று உள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc