உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை! போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு …

பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும், அதே நேரத்தில் ஊழியர்கள் மீது நீதிமன்ற உத்தரவில்லாமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
source: dinasuvadu.com

Leave a Comment