#Breaking! நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி! 22ஆம் தேதி தூக்கு உறுதி!

  • நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
  • இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  ராம்சிங், முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்பு அச்சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 நபர்களையும் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து,  குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்கள் வயதை கணக்கில் கொண்டு, இந்த தண்டனையை குறைக்க வேண்டும். எங்கள் குடும்பத்தினரையும் கணக்கில் கொண்டு இந்த தண்டனையை குறைக்க வேண்டும். என கூறப்பட்டிருந்தது. இந்த மனு  இன்று ( ஜனவரி 14-ம் தேதி ) 5 நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்பட்டது. அவர்களின் சீராய்வு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதனால், குற்றவாளிகள் வரும் 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த குற்றவாளிகளுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு குடியரசு தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ள கருணை மனுக்களே. அந்த கருணை மனுவையும் குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டால், தூக்குத்தண்டனை மீண்டும் உறுதியாகிவிடும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.