இணையதள ஆபாச வீடியோக்களில் சிக்கி தவிக்கும் சிறுவர்கள்! காரணம் இவர்கள் தான்! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

இன்றைய நாகரீகமான உலகில் மிக சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே செல்போன் உபயோகிக்கின்றனர். சொல்லப்போனால், இந்த செல்போன் சிறுவர்களின் வாழ்வில் ஒரு நச்சு கலையாக வளர்ந்து வருகிறது. இந்த களை பிடுங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களில், 40 சதவிகிதத்தினர் ஆன்ராய்டு மொபைலை உபயோகிப்பதாக unicef  நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், 92% சிறுவர்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அதிகமான சிறுவர்கள் இப்படிப்பட்ட ஆபாச விடீயோக்களுக்கு அடிமையாவதற்கு முக்கிய காரணம்  அவர்களது பெற்றோர்கள் தான். ஏன்னென்றால், பிள்ளைகளை கவனிக்காமல் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் வேலைக்கு செல்வதால் பிள்ளைகளை கவனிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.

பிள்ளைகளின் கைகளில் செல்போனை கொடுத்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனிக்க வேண்டும். மேலும், இப்படிப்பட்ட ஆபாச வீடியோக்களை பார்க்க இயலாதவாறு, இணையதளத்தை முடக்கி அவர்களது கையில் கொடுக்க வேண்டும். இந்த நிலை அவர்களது படிப்பில் கவனம் செலுத்த இயலாமல், சிறுவர்களின் வாழ்வு சீரழிவதற்கு வழிவகுக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.