காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடிதம் எழுதினால் பரிசு:அஞ்சல் துறை

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில், கடிதம் எழுதும் போட்டியை, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.அக்டோபர், 2ம் தேதி காந்தி ஜெயந்தி. இதை முன்னிட்டு, அஞ்சல் துறையின் கடிதம் எழுதும் இயக்கத்தின் கீழ், கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இக்கடிதம், ‘அன்பு தேசபிதா, நீங்கள் என்னை ஊக்கப்படுத்துகிறீர்கள்’ என்ற தலைப்பில் இருக்க வேண்டும். தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் எழுதலாம். இன்லேண்ட் கவரில், 500 வார்த்தைகள்; வெள்ளை தாளில் எழுதினால், 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.இதில், 18 வயதுக்கு உட்பட்டோர், அதற்கு மேற்பட்டோர் என, இரு பிரிவுகளாக பரிசுகள் வழங்கப்படும். அதனால், கடிதத்தில் வயதை குறிப்பிட வேண்டும். கடிதத்தை, ‘தலைமை அஞ்சலக இயக்குனர், தமிழ்நாடு வட்டம், சென்னை – 2’ என்ற முகவரிக்கு, ஆகஸ்ட், 15க்குள், அனுப்பி வைக்க வேண்டும். ஆக., 5ல் அஞ்சலகம் வந்தும், கடிதம் எழுதி ஒப்படைக்கலாம்.தமிழக அளவில் வெற்றி அடையும், 29 பேருக்கு, முதல் பரிசாக, 25 ஆயிரம்; இரண்டாம் பரிசாக, 10 ஆயிரம்; மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்திய அளவில் வெற்றி பெறுவோருக்கு, முதல் பரிசாக, 50 ஆயிரம்; இரண்டாம் பரிசாக, 25 ஆயிரம்; மூன்றாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.சென்னையில் நடக்கும் தபால் தலை சேகரிப்பு கண்காட்சியில், தமிழக அளவில் தேர்வாகும், முதல், 10 கடிதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும்.தேசிய அளவில் வெற்றிபெறும் முதல் மூன்று கடிதத்திற்கு, குஜராத் மாநிலம், சபர்மதி ஆசிரமத்தில், காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பரிசுகள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களை, அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தெரிந்து கொள்ளலாம்.

author avatar
Castro Murugan

Leave a Comment