நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் தொடர்பான மனோஜ் திவாரி கருத்து: TRS எம்.பி கவிதா ட்விட்டரில் வரவேற்பு

நாடாளுமன்றத்தை முடக்கும் எம்.பிக்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக்கோரும் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.பி மனோஜ் திவாரியின் கருத்துக்கு, சந்திர சேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கவிதா வரவேற்பு தெரிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இறு அவைகளிலும் தொடர்ந்து 13வது நாளாக இன்றும் முடங்கியுள்ளன. இதனால் எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசு கொண்டுவரும் மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. நாடாளுமன்றத்தை முடக்கும் எம்.பிக்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக் கோரி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி கவிதா, ”அன்றாட பிரச்னைகள் குறித்து அரசு தினமும் விவாதித்தால் நாடாளுமன்றத்தில் எந்த கட்சியோ, எம்.பியோ போராட அவசியம் இருக்காது. இருப்பினும் அரசு வேலை செய்யாத எம்.பிக்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்தால் பாராட்டதக்கது” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜகவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஏற்கனவே ஆதரித்து வரும் சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிதாவின் சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment