ஜாக்கிரதையா இருங்க, நீங்க செய்கிற இந்த செயல்களெல்லாம் உங்கள் மூளையை பாதிக்கும்

  • நாம் செய்கின்ற சில செயல்கள் நமது மூளையை பாதிக்கிறது.

இன்றைய சமூகம் ஒரு இயந்திரமயமான சமூகமாக மாறிவிட்டது. காலையில், எழுந்தாள், காலில் சக்கரத்தை காட்டிவிட்டது போல வீட்டு வேலைகளை வேகமாக முடித்து, அலுவலக பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

நமது வாழ்க்கையில், அனுதினமும் பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். நாம் செய்கின்ற அனைத்து செயல்களுமே நமது உடலுக்கு நன்மை தருமா? அல்லது தீமை தருமா? என்றெல்லாம் யோசிப்பதில்லை.

Image result for நல்ல உறக்கம் இல்லாமை

நமக்கு எதை செய்வதற்கு பிடித்திருக்கிறதோ, அதை நாம் நம் விருப்படி, நமது உடல் ஆரோக்கியத்தை கூட கருத்தில் கொள்ளாமல் செய்கிறோம். ஆனால், நம் அன்றாட வாழ்வில் செய்து வரும் சில செயல்கள் நமது மூளையை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.

தற்போது இந்த பதிவில் நாம் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமது மூளையை பாதிக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

காலை உணவை தவிர்த்தல்

நம்மில் அதிகமானோர் அதிகாலையில் வேலைக்கு செல்வது, படிக்கும் மாணவர்கள் காலையில் நேரத்திற்க்கே எழுந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்கிறோம். நாம் வீட்டை விட்டு கிளம்புகிற அந்த சமயத்தில் நமக்கு பசி எடுப்பதில்லை. எனவே நாம் உணவு உண்பதை பொருட்பசுத்தாமல் சென்று விடுகிறோம்.

Image result for காலை உணவை தவிர்த்தல்

இவ்வாறு, காலை உணவை உண்ணாமல் செல்வதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, மூளைக்கு தேவையான சக்தியும் ஊட்டச்சத்துக்களும் சென்றடையாமல், இது மூளையை பாதிக்கிறது.

அதிகம் சாப்பிடுதல்

Image result for அதிகம் சாப்பிடுதல்

நமது பசியின் அளவை பொறுத்து தான் உணவை உட்கொள்ள வேண்டும். நமக்கு பிடித்தமான உணவு என்பதற்காக, அளவுக்கதிகமாக உனபாதை தவிர்க்க வேண்டும்.  மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகிறது.

மாசு நிறைந்த காற்று

Image result for மாசு நிறைந்த காற்று

நம்மை சுற்றி பல தொழிற்சாலைகள் பெருகிவிட்டது. இவ்வாறு இருப்பதால், நாம் எங்கு சென்றாலும், சுத்தமான காற்றை சுவாசிக்க  இயலுவதில்லை. நாம் மாசு நிறைந்த கருக்களை சுவாசிப்பதால், நமக்கு தேவையான ஆக்சிஜனை பெறுவதில் தடை ஏற்படுகிறது. இதனால், மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மூளை பாதிப்படைகிறது.

நல்ல உறக்கம் இல்லாமை

ஒரு மனிதனுக்கு உணவு எவ்வளவு அவசியமானதாக நாம் கருதுகிறோமோ, அது போல தான் உறக்கமும், ஒரு நாளில் ஒரு மனிதனுக்கு குறைந்தது 8 மணி நேரமாவது உறக்கம் இருக்க வேண்டும்.

Related image

அவ்வாறு உறக்கம் இல்லாமல் இருந்தால் அது மூளைக்கு நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். மேலும், தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.

புகை பிடித்தல்

Image result for புகை பிடித்தல்

புகை பிடிப்பதால் உடலுக்கு பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புகைப்பிடிப்பதால் முக்கியமாக மூளை தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதனால் மூளை சுருங்கள் கூடிய அபாயம் ஏற்படுகிறது..

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment