கூகுள் ஏன் இப்படியெல்லாம் பண்ணுது! அதிர்ச்சி தரும் கூகுள் சேர்ச்…

கால மாற்றத்திற்கு ஏற்ப எல்லாவித தொழிற்நுட்பமும் மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால், சில சமயங்களில் இது போன்ற தொழிற்நுட்ப மாற்றங்கள் பல தவறான முன் உதாரணமாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் தான் தற்போது கூகுள் செய்த தவறும் உள்ளது. கூகுள் சர்ச்சில் பலவித குளறுபடிகள் உள்ளது என்பதை நாமே அறிந்து கொள்ள இயலும். அந்த வகையில் தான் சமீபத்தில் ஒரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.

தவறான சேர்ச்
கூகுள் தேடுபொறியில் ‘bad chief minister’ என தேடினால் அதற்கான விடை கேரளத்தின் தற்போதைய முதல்வரான பினராயி விஜயன் அவர்களை குறிப்பதாக உள்ளது. அத்துடன் அவரை பற்றிய முழு விவரமும் இதில் இடம் பெற்றுள்ளது.

பதில்!
மற்ற மாநிலங்களை விட பல விதத்தில் சிறப்பான பணியை தான் இவர் கேரளத்திற்கு தந்து வருகிறார் என்பது பலரும் அறிந்த உண்மை. அப்படி இருக்கையில் இவ்வாறு ஒருவரை கூகுள் சர்ச்சில் காண்பிப்பது தவறான ஒன்றாகவே உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதை பற்றி ஒரு வார்த்தை கூட கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம்
சிலர் கேரளத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் தான் இப்படிப்பட்ட தவறான புரிதலை இந்த வகை தொழிற்நுட்பங்கள் ஏற்படுத்துகின்றன என தெரிவிக்கின்றனர். எதுவாக இருந்தாலும், இதற்கு சரியான விளக்கத்தை கூகுள் நிறுவனம் தான் தர இயலும்.

Leave a Comment