தினந்தோறும் பூண்டு சாப்பிட்டு வந்தால் இந்த அற்புதங்கள் உங்கள் உடலில் நிகழுமாம்!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தி பொருட்களியிலே ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன; இதை நன்கு அறிந்தும் நாம் அதை பெரிதாக மதிப்பதில்லை. அதனால் தான் என்னவோ சிறிய நோய்த்தொற்றையும் நம் உடலால் தாங்க முடியாத நிலை காணப்படுகிறது; நமது உடலுக்கு பெரிதாக ஏதேனும் பாதிப்பு வந்த பின் தான், இந்த மருந்து பொருட்களின் மகத்துவம் நமக்கு தெரிகிறது.

வருமுன் காப்பதே சிறந்தது; ஆகையால், நாம் சமையலுக்கு பயன்படுத்தி வரும் பூண்டினை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் என்னென்ன அற்புத மாற்றங்கள் நிகழும் என இப்பதிப்பில் படித்து அறியுங்கள்.

புற்றுநோய்

புற்றுநோய் என்ற கொடிய நோயை தடுக்க, குணப்படுத்த மருந்து இல்லை என்று எண்ணி பல லட்ச ரூபாய்களை அல்லரோபதி மருத்துவத்திற்கு செலவழிபவர்கள் தான் நம்மில் அதிகம்.

ஆனால், புற்றுநோய் ஏற்பட்டால் அதை 10 ரூபாய் பூண்டினை வைத்தே குணப்படுத்திவிடலாம் என்று நம்மில் பலர் அறிவதில்லை; பூண்டில் சல்பர் சத்துக்கள் நிறைந்திருப்பதால், அது உடலில் புற்றுநோய் செல்கள் ஏற்படாமல் தடுக்கவும், ஏற்பட்ட புற்றுநோய் மேலும் வளராமல் உடலில் இருந்து நீங்கவும் உதவும்.

மாரடைப்பு

தினம் ஒரு பூண்டினை உண்டு வருவது இதயத்தை பலப்படுத்தி, இதயம் சார்ந்த நோய்களை தூரத்தில் வைக்க உதவும். இதற்கு ஒரு வாழ்ந்து காட்டிய உதாரணமாக திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர்; கலைஞர் தினந்தோறும் ஒரு பூண்டினை சில பொறிகடலைகளுடன் சேர்த்து உண்டு வந்ததாக அவரே சில பெட்டிகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நோய்தொற்று மற்றும் ஒவ்வாமை

நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படாமல் தடுக்க பூண்டு உதவுகிறது; பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி பூஞ்சை சத்துக்கள் உடலை நோய்கிருமிகள் தாக்காத வண்ணம் உடலை பாதுகாக்கும்.

முடி மற்றும் தோல்

பூண்டு ஆரோக்கிய நன்மைகளுடன், அழகு நன்மைகளையும் தருகிறது; பூண்டினை தினசரி உண்டு வருவது கூந்தலின் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுக்கவும் அதிகம் உதவும். பூண்டில் இருக்கும் சில சத்துக்கள் சருமத்திற்கு பொலிவை அளித்து, உடல் எப்பொழுதும் இளமையாக இருக்க உதவும்; வயதாவதை தடுக்க உதவும்.

author avatar
Soundarya

Leave a Comment