அயோத்தி  வழக்கு ! இன்று  இறுதி விசாரணை

Ayodhya case! Final hearing today

அயோத்தி  வழக்கில் இன்று  இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணையில் சமரசமான தீர்வு காணவேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட சமரசக்குழுவை  அமைத்து உத்தரவு பிறப்பித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தி நில விவகாரம் தொடர்பாக  சமரசக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது .அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண இயலவில்லை அயோத்தி விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட 3 பேர் குழு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ,நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும்  அறிவித்தார்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

The final hearing of the Ayodhya case will be taken up today, said a five-judge bench headed by Chief Justice Ranjan Gogoi. The five-judge bench, headed by Supreme Court Chief Justice Ranjan Gogai, set up a three-member compromise committee headed by retired Justice Khalifullah to seek a compromise in the Ayodhya case. A few days ago, a compromise committee filed a report on the Ayodhya land issue. The three-member panel on the Ayodhya matter reported to the Supreme Court. The Supreme Court Chief Justice Ranjan Gogai then announced that the trial would be held daily. The final hearing of the case will take place today, said a five-judge bench headed by Chief Justice Ranjan Gogoi.