T20I women: வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கும் ,  வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கும் இன்று அதிகாலை மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக பிரிட்னி கூப்பர் 29 ரன்கள் எடுத்தார்.  ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் ஜார்ஜியா 3 விக்கெட்டையும் , ஜோனாசென் 4 விக்கெட்டையும் பறித்தார்கள். இதைத்தொடர்ந்து 82 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டத்தால் 7.3 ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்து 83 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதில் அதிகபட்சமாக அலிஸா ஹீலி 38 ரன்கள் அடித்தார்.

ஆஸ்திரேலியா மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. முதலில் விளையாடிய  மூன்று ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா மகளிர் அணி வெற்றி பெற்று.

இதைத்தொடர்ந்து கடந்த 14-ம் தேதி முதல் இன்று வரை விளையாடிய 3 டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் விளையாடிய அனைத்து போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை  ஒயிட் வாஷ் செய்தது.

author avatar
murugan