#BREAKING : 3 முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

3ஆவது முறையாக  டெல்லி முதல்வராக  அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுள்ளார்.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.இதனால் டெல்லி ராம்லீலா மைதானத்தில்  பதவி ஏற்பு விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில் இன்று ராம்லீலா மைதானத்தில்  நடைபெற்ற விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார்.கெஜ்ரிவாலுக்கு  துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அரவிந்த் கெஜ்ரிவாலுடன் 6 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.இந்த விழாவில்  பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது,ஆனால் அவர் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.