சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதன்முறையாக காஷ்மீருக்கு செல்லும் ராணுவ தளபதி பிபின் ராவத்

இன்று ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீர் செல்கிறார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழக்கங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சாமீபத்தில் அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு  யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும்  என்றும் அறிவித்தது.இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.பல இடங்களில் 144 தடை உத்தரவு ,செல்போன் சேவை ,இணைய சேவை உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு தற்போது படிப்படியாக செல்போன் சேவை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் இன்று ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீர் செல்கிறார்.சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக பிபின் ராவத் காஷ்மீர் செல்லவுள்ளார்.அங்கு சென்று அவர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.பின்னர் அங்கு  உள்ள அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.