முட்டை கோஸிலும் இவ்வளவு மருத்துவ குணங்களா?

காய்கறி வகைகளில் விரும்பி உண்ண கூடிய பூ தான் முட்டை கோஸ். இந்த முட்டை கோஸில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.

முட்டை கோஸின் மருத்துவ குணங்கள் 

கண் பார்வை கோளாறுகளை நீக்குவதில் முட்டை கோஸ் சிறந்த பங்காற்றுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்தால் கண் நரம்புகளை வலு படுத்துகிறது. மூல நோய் பாதிப்புகளை குறைப்பதோடு அஜீரண கோளாறுகளையும் நீக்குகிறது. 

சுண்ணாம்பு சத்து அதிகம் இருப்பதால் எலும்பு சம்மந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி எலும்புக்கு வலு கொடுக்கிறது. உடல் சூட்டை தணிப்பதோடு மலச்சிக்கலையும் குணமாக்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி, முகத்தை பளபளப்பாக்கும். தலை முடி உதிர்வை நீக்கி பலம் அளிப்பதோடு நல்ல முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. 

author avatar
Rebekal