ஆணாதிக்கம் பற்றி ஆண்ட்ரியா ஆவேசம் !

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் இன்னும் முன்னணி நடிகை பட்டியிலில்

By Fahad | Published: Mar 30 2020 04:18 PM

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் இன்னும் முன்னணி நடிகை பட்டியிலில் இடம் பிடிக்காதவர் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டார். சினிமாவில் அதிகமாக ஆணாதிக்கம் காணப்படுகிறது என்று ஆண்ட்ரியா விரக்தியுடன் கூறியுள்ளார். அப்போது அங்கு பேசியதாவது: “‘தரமணி’ படத்தில் நடித்த எனக்கு பாராட்டும் புகழும் கிடைத்தது. அந்தப் படம் பற்றி மக்கள் அதிகம் பேசினார்கள். அதன் பின்னர் எனக்கு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. நடிகை நயன்தாராவே முதலில் விஜய், ரஜினி, அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பிறகு தான் ‘நயன்தாரா’ என்ற ஸ்டார் ஆக முடிந்தது. அது நடக்காவிட்டால், அந்த ஹீரோயின் பற்றி வெளியில் தெரிய வாய்ப்பிருந்திருக்காது. ஒரு நடிகையின் திறமையை அவர் யாருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்து யாரும் நிர்ணயிக்கக் கூடாது. தமிழ் சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் இருப்பதால் நடிகைகளுக்கு எப்போதுமே சினிமாவில் குறைந்தப்பட்ட அளவிலான முக்கியத்துவம் மட்டுமே தரப்படுகிறது” என்றார் ஆண்ட்ரியா.