அமெரிக்காவிற்கு சவால் விடும் ரஷ்யா!இடைத் தேர்தலிலும் ரஷ்யா தலையீடு ?

ரஷ்யாவின்  உள்த்துறை செயலாளர் டில்லர்சன் அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத் தேர்தலிலும் ரஷ்யதலையீட்டை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என   தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரசுக்கான இடைத் தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள டில்லர்சனிடம், 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலைப் போன்று தற்போதும் ரஷ்யாவின் தலையீடு இருக்க வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ரஷ்யா அதற்கான முயற்சிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டார். தேர்தலில் தலையிட வேண்டும் என ரஷ்யா விரும்பினால், அதற்கான வழியை கண்டு பிடித்து செய்தே தீருவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment