திருமணம் ஆகாமலே 5 மாதம் கர்ப்பிணியான அஜித் பட நடிகை!

நடிகை கல்கி கொச்லின் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கய் ஹெர்ஷ்பெர்க் என்பவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறியுள்ளார். எது முக்கியம் என்பதை குழந்தைகள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்குள் ஒரு உயிர் வளர்கிறது என்ற உணர்ச்சியே தனி மகிழ்ச்சி அளிக்கிறது  என்றும், டிசம்பர் மாதம் கோவாவில் வாட்டர் பெர்த் முறை மூலம் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.